» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக் மீது அரசு பஸ் மோதியதில் நண்பர்கள் இருவர் பலி: சங்கரன்கோவில் அருகே பரிதாபம்

புதன் 3, மார்ச் 2021 8:39:26 AM (IST)

சங்கரன்கோவில் அருகே மோட்டார் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருமலாபுரம் பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் சூர்யா (21), மாரிராஜா மகன் ராகுல் (21). இருவரும் நெருங்கிய நண்பர்கள். பிளஸ்-2 வரை படித்துள்ள இவர்கள் வேலை தேடி வந்தனர். நேற்று காலையில் ராகுலின் சொந்த ஊரான மலையடிகுறிச்சிக்கு இருவரும் பைக்கில் சென்றுவிட்டு மாலையில் 2 பேரும் திருமலாபுரத்திற்கு திரும்ப வந்து கொண்டு இருந்தனர். மாலை 6.30 மணிக்கு திருமலாபுரம் ரயில்வே கேட் அருகே வந்தபோது அந்த வழியாக சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி செல்லும் அரசு பஸ் பைக் மீது மோதியது. 

இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட சூர்யா, ராகுல் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Thalir Products

Nalam PasumaiyagamThoothukudi Business Directory