» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் புதிய பாலம் - சாலை விரிவாக்கப்பணி: 32 கடைகள் இடித்து அகற்றம்!!

புதன் 27, ஜனவரி 2021 5:30:28 PM (IST)நெல்லையில் புதிய பாலத்தை திறப்பதற்கும் சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக இருக்கும் நகர் புற வேளான் விரிவாக்க நிலையம் உள்ளிட்ட 32 வணிக நிறுவனங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றும் பணி தொடங்கியது.

நெல்லை மாநகர பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆங்காங்கே பாலங்கள்,சாலைகள் விரிவாக்க பணிகள் போன்றவை திட்டமிடப்பட்டு ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது.இதையொட்டி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே நெல்லை சந்திப்பையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் வகையில் கொக்கிரகுளத்தில் உள்ள 176 ஆண்டுகள் பழமையான சுலோச்சன முதலியார் பாலத்தின் அருகே புதிதாக ஒரு பாலம் கட்டுவதற்கு அரசு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு. 10 தூண்கள், நடைபாதை வசதியுடன்கூடிய இந்த பாலம் 14.8 மீட்டர் அகலம், 235 மீட்டர் நீளத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் சாலைகள் விரிவாக்கம் செய்து சாலை மேம்படுத்தப்படும் நடந்து வரும் நிலையில் சாலை விரிவாக்கத்திற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் நெல்லை சந்திப்பு பகுதியில் நகர்புற வேளான் விரிவாக்க மையம் மற்றும் 32 வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.இந்த இடத்தை காலி செய்து சாலை பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து வணிக நிறுவனத்தினர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் நீதிமன்றமும் கடைகளை காலிசெய்ய அறிவுறுத்தியது.இன்னிலையில் கடந்த 12 ம் தேதி நெடுஞ்சாலை மற்றும் வருவாய்துறையினர் கடைகளை காலி செய்ய 7 நாள் அவகாசம் வழங்கி நோட்டீஸ் கொடுத்தது.கால அவகாசம் கடந்த நிலையிலும் கடைகளை காலி செய்ய முன்வராத கடைக்காரர்களை கடை கடையாக நேரில் சென்று விரிவாக்க பணிகள் குறித்தும் தங்களது கடைகளால் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கமுடியாத சூழல் குறித்தும் நெல்லை சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழு விளக்கமளித்ததோடு 24 மணி நேரத்தில் கடைகளை காலி செய்யுமாறு இறுதி எச்சரிக்கையும் விடுத்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் அந்த கட்டடங்கள் இடிக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.சாலைகளில் உள்ள கட்டடங்களை இடிக்கும் பணி ஓரிரு நாளில் நிறைவு பெற்று புதிய இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய சாலை அமைக்கும் பட்சத்தில் நெல்லை மாநகர பகுதியின் மையமாக இருக்கு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.அதிகாலையிலேயே அதிகளவு போலீஸ் குவிக்கப்பட்டு கடைகள் இடிக்கும் பணிகள் நடந்து வருவதால் அதனை வேடிக்கை பார்க்க கூடிய கூட்டத்தால் சந்திப்பு கொக்கிரகுளம் பகுதிகளுக்கு இடையே கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.சாலை அமைப்பு பணிகளுக்காக இடிக்கபடும் வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமணை பட்டா வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Thalir Products

Nalam PasumaiyagamThoothukudi Business Directory