» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு கரோனா தொற்று உறுதி : சுகாதாரத் துறை தகவல்

வெள்ளி 22, மே 2020 7:27:26 PM (IST)

தமிழகத்தில் இன்று  புதிதாக 786 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் குறித்த தகவலை தமிழக சுகாதாரத் துறை  இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 569 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில், இன்று தமிழகத்தில் மட்டும் 694 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டோர் 92.இன்று மேலும் 4 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Anbu Communications






Thoothukudi Business Directory