» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கு நிர்வாக காரணங்கள் என்ன? - உயர்நீதிமன்றம் கேள்வி

செவ்வாய் 23, ஜூலை 2019 3:17:46 PM (IST)

தபால் துறை தேர்வு ரத்து செய்ததற்கான காரணங்கள் குறித்து விரிவான ஆவணங்களுடன் பதில் மனுவை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன. இதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வருங்காலங்களில் தபால் துறை நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை வந்தபோது, தபால் துறை சார்பில் இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், பிராந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்படும் என கூறப்படவில்லை என சுட்டிக்காட்டினர்

மேலும் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, அனைத்து தபால் துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வை எப்படி நடத்துவது? என்பது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும், அது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தபால் துறை தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்பது குறித்து ஆவணங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesCSC Computer Education


Nalam Pasumaiyagam

Anbu Communications
Thoothukudi Business Directory