» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பராமரிப்பு பணிகள், ரயில் போக்குவரத்தில் மாற்றம் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு

புதன் 17, ஜூலை 2019 5:37:06 PM (IST)

வாஞ்சி மணியாச்சி -  திருநெல்வேலி பிரிவில் நாரைக்கிணறு - கங்கைகொண்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே  பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் கீழ் கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

1.வண்டி எண்.16191 தாம்பரம் - நாகர்கோயில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் 20.07.2019  மற்றும் 23.07.2019 (சனிக்கிழமை / செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் கோவில்பட்டி மற்றும் நாகர்கோயில் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

2.வண்டி எண்.16192 நாகர்கோயில் - தாம்பரம் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் 20.07.2019  மற்றும் 23.07.2019 (சனிக்கிழமை / செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் நாகர்கோயில் மற்றும் கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

3.வண்டி எண்.22627 திருச்சிராப்பள்ளி -  திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 20.07.2019  மற்றும் 23.07.2019 (சனிக்கிழமை / செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் வாஞ்சி மணியாச்சி மற்றும் திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

4.வண்டி எண்.22628 திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் 20.07.2019  மற்றும் 23.07.2019 (சனிக்கிழமை / செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில்  திருவனந்தபுரம் மற்றும் வாஞ்சி மணியாச்சி  இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

5. வண்டி எண்.56768 திருச்செந்தூர் -  தூத்துக்குடி பயணிகள் ரயில் 20.07.2019  மற்றும் 23.07.2019 (சனிக்கிழமை / செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்பட்டு  தூத்துக்குடி  ரயில் நிலையத்திற்கு 45 நிமிடங்கள் கால தாமதமாக சென்றடையும்.

6. திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 20.07.2019  (சனிக்கிழமை) அன்று மாலை 04.00 மணிக்கு  புறப்படவேண்டிய வண்டி எண்.02193 திருநெல்வேலி - ஜபல்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் 20.07.2019  (சனிக்கிழமை) மாலை 04.45 மணிக்கு புறப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Anbu CommunicationsThoothukudi Business Directory