» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

வியாழன் 11, ஜூலை 2019 12:49:07 PM (IST)

அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீரர் அழகு முத்துக்கோன் 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களை எதிர்த்து கடுமையாக போராடி உயிர்த்தியாகம் செய்தவர். அவரது 262வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு ஏற்பட்டதைப்போல், இந்திய அணிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிப்பதில் பாரபட்சம் காட்டவில்லை என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Anbu Communications



Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory