» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வருக்கு திடீர் உடல்நலக் குறைவு : பிரசாரம் ரத்து!

செவ்வாய் 26, மார்ச் 2019 3:49:19 PM (IST)

தென்சென்னை பகுதியில் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில், முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். சேலத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐந்தாவது நாளான நேற்று வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வழக்கமாக பேசும் மைக் இல்லாமல் காலர் மைக் பொருத்திக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதுதொடர்பாக நாம் இன்று காலைப் பதிப்பில், நாள்தோறும் காலையிலேயே சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து இரவு வரை தொடர்ந்து பேசிவருவதால் முதல்வருக்கு தொண்டை வலி அதிகரித்து கரகரத்த குரலில் பேசிவருகிறார் என்றும், நாள்முழுக்க நின்றுகொண்டே மைக்கைப் பிடித்து பேசுவதால் கை, கால் வலி அதிகமாகிவிட்டது. அதனால்தான் காலர் மைக்கை பயன்படுத்துகிறார் என்றும், கலைஞர் எப்படித்தான் பேசினாரோ... கரகரத்த எடப்பாடி குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து இன்று (மார்ச் 26) திருவல்லிக்கேணி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தொண்டை வலி அதிகமானதன் காரணமாக பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், சிறிது ஓய்வுக்குப் பிறகு இன்று மாலை முதல்வர் தனது பிரச்சாரத்தைத் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Mar 26, 2019 - 06:09:30 PM | Posted IP 141.1*****

இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு இருக்குற மாதிரி ஏதும் தெரியுதா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

CSC Computer EducationBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory