» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி மீது தாக்குதல்: கேஸ் சிலிண்டரைத் திறந்து மிரட்டிய தந்தை கைது!

சனி 25, ஜூலை 2026 7:47:00 AM (IST)

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவியை அவதூறாகப் பேசித் தாக்கியதுடன், சமையல் எரிவாயு உருளையைத் திறந்து விட்டு அச்சுறுத்திய தாயின் 2வது கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சேர்ந்தவர் தனியார் கல்லூரி முதலாமாண்டு மாணவி. இவரது தந்தை இறந்துவிட்டதால், தாய் கைபயார் என்பவர் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த ஓட்டுநரான முகம்மது அபுபக்கர் சித்திக் (34) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.

முகம்மது அபுபக்கர் சித்திக் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியையும் அவரது மகளையும் அவதூறாகப் பேசித் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கைபயார் தனது மகளுக்குப் புதிதாக செல்போன்  வாங்கித் கொடுத்துள்ளார். இதையறிந்த முகம்மது அபுபக்கர் சித்திக் ஆத்திரமடைந்து, மாணவியை அவதூறாகப் பேசித் தாக்கியுள்ளார். 

மேலும், ஆத்திரத்தின் உச்சத்தில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையைத் திறந்து விட்டு இருவரையும் மிரட்டியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாயும் மகளும் அலறிச் சத்தமிட்டனர். இவர்களது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, முகம்மது அபுபக்கர் சித்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இச்சம்பவம் குறித்துக் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த முகம்மது அபுபக்கர் சித்திக்கைக் காவல்துறையினர் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory