» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜனநாயகன் படத் தீவிரத்தை ஜனநாயக ஆட்சியிலும் காட்ட வேண்டும்! – முன்னாள் அமைச்சர் பி. கீதாஜீவன் சாடல்!

வெள்ளி 24, ஜூலை 2026 7:42:37 AM (IST)

தூத்துக்குடியில் நடந்த லாக்அப் மரணத்தைக் கண்டித்தும், தொகுதிப் பிரச்சனைகளைப் புறக்கணித்துவிட்டுத் திரைப்படக் காட்சிகளைக் கொண்டாடும் அரசு நிர்வாகத்தைச் விமர்சித்தும் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதாஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "தூத்துக்குடியில் நிகழ்ந்த லாக்அப் மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த நபர் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

இத்தகைய கொடூரச் சம்பவங்கள் சட்டத்தின் மீதும், நீதி அமைப்பின் மீதும், காவல்துறை மீதும் பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை முற்றிலுமாகச் சிதைத்துவிடும்."

"தூத்துக்குடியில் இப்படிப்பட்ட சூழலால் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஆ. ஸ்ரீநாத், தூத்துக்குடியிலேயே இருந்துகொண்டும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்துள்ளார்.

முதலமைச்சர் நடித்து வெளியான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் காட்சியைக் காணச் சென்று, அதை ரீல்ஸ் வீடியோவாக எடுத்து வெளியிட்டுத் தொகுதி மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்."

"ரீல்ஸ் மாடல் முதலமைச்சர் விஜய், எப்போது அந்த மாயப் பிம்பத்திலிருந்து வெளிவந்து உண்மையான மக்கள் பிரதிநிதியாகச் செயல்படப் போகிறார்? ஒரு ஜனநாயக நாட்டில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் மீது காண்பிக்கும் அதே தீவிரத்தை, நாட்டில் உண்மையான ஜனநாயக ஆட்சி நடைபெறுவதிலும் காண்பிக்க வேண்டும்." இவ்வாறு முன்னாள் அமைச்சர் பி. கீதாஜீவன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory