» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 12பேர் சிக்கினர் - டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல்!
வியாழன் 23, ஜூலை 2026 8:17:03 PM (IST)

'சாகர் கவாச்' கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் டம்மி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை கடலோரக் காவல் படை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் 'சாகர் கவாச்' கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மாதிரி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை கடலோரக் காவல் படை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
கடல் வழியாகத் தீவிரவாதிகள் மற்றும் சட்டவிரோத நபர்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காகச் 'சாகர் கவாச்' எனப்படும் இரண்டு நாள் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை ஜூலை 23, 2026 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி கடலோரக் காவல் படை ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடலிலும் கடற்கரையிலும் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது ஒத்திகையின் எதிரணியாகச் செயல்பட்டு ஊடுருவ முயன்ற வான் தீவு தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த 4 பேர் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் பதுங்கியிருந்த 4 பேர் உட்பட மொத்தம் 12 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 4 மாதிரி வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








