» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் : மக்கள் நல கூட்டமைப்பு அறிவிப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 8:04:30 PM (IST)
தூத்துக்குடியில் பொதுமக்கள் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் அமைப்பட்டுள்ள ஒரே சிக்னல் முறையைக் கைவிட்டு, தனித்தனி சிக்னல் முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜூலை 30-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனத் தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள 1-வது மற்றும் 2-வது ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் வகையில் ஒரே சிக்னல் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இம்முறையைக் கைவிட்டு, இரண்டு கேட்களுக்கும் தனித்தனி சிக்னல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை வைத்தும் ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து, வரும் ஜூலை 30-ஆம் தேதி காலை 10:30 மணியளவில் ரயில்வே நிர்வாகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தூத்துக்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








