» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அருணாச்சலம் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் : எஸ்.பி.சண்முகநாதன் வலியுறுத்தல்!

வியாழன் 23, ஜூலை 2026 7:40:08 PM (IST)

admkGhtuty.jpg

தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலத்தின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று  அதிமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வலியுறுத்தினார். 

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த நாகராஜன் - பரமேஸ்வரி தம்பதியரின் மகன் அருணாச்சலம், கடந்த 17-ஆம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காகத் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசாரணையின் போது காவலர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த அருணாச்சலம், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அருணாச்சலம் இன்று (23.07.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதாலேயே அருணாச்சலம் உயிரிழந்தார் எனக்கூறி அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவலறிந்த அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அருணாச்சலத்தின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளைஞர் அருணாச்சலத்தின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியுதவி அளிப்பதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட மாணவரணிச் செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்கச் செயலாளர் நிலா சந்திரன், வட்டச் செயலாளர்கள் பூர்ணசந்திரன், மணிகண்டன், கொம்பையா, சொக்கலிங்கம், சம்படி பழனி, சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory