» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐ விசாரணை தாமதம் ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!
வியாழன் 23, ஜூலை 2026 5:55:05 PM (IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை தாமதம் அடைவது ஏன் என்றும், ஒரே ஒரு ஆய்வாளர் மட்டும் தானாகவே துப்பாக்கியை எடுத்துச் சுட்டாரா என்றும் கேள்விகளை எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இது குறித்துத் தமிழக அரசு மற்றும் சிபிஐ பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தனி விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கும் எண்ணம் உள்ளதா? சிபிஐ விசாரணை இவ்வளவு தாமதம் அடைவது ஏன்? மேல் அதிகாரிகளின் எந்த உத்தரவும் இல்லாமல் ஒரே ஒரு ஆய்வாளர் மட்டும் தானாகவே துப்பாக்கியை எடுத்து 16 பேரையும் சுட்டாரா? இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதா?" என்று பல கேள்விகளைச் சரமாரியாக எழுப்பினர்.
மேலும், இக்கேள்விகள் குறித்துத் தமிழக அரசும் மத்திய புலனாய்வு அமைப்பும் (சிபிஐ) விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








