» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அருணாச்சலம் குடும்பத்திற்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? உதயநிதி கேள்வி!
வியாழன் 23, ஜூலை 2026 4:20:26 PM (IST)

தூத்துக்குடியில் விசாரணையின் போது காவல்துறையினரால் தாக்கப்பட்ட வாலிபர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த நாகராஜன் மகன் அருணாச்சலம் (29). லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்த இவரை, சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறி கடந்த 18-ஆம் தேதி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையக் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையின் போது அவர் திடீரென மயங்கி விழுந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்தபோது அவரைச் சந்தித்த நண்பர்களிடம், 3 காவல்துறையினர் தன்னைத் தாக்கியதாக அருணாச்சலம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இத்தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
இதையறிந்த அருணாச்சலத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்திருப்பது வேதனை அளிக்கிறது.
காவலர்கள் தனக்கு இழைத்த அநீதியைத் தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும்போது நெஞ்சம் கலங்குகிறது. இத்தகைய காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மௌனம் காப்பதால் இச்சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்திற்கு இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








