» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா : சிறப்பு கூட்டுத் தூய்மைப் பணி தொடக்கம்

வியாழன் 23, ஜூலை 2026 3:11:56 PM (IST)

PanimayaCleanwork.jpg

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கூட்டுத் தூய்மைப் பணி தொடங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பனிமய மாதா கோவில் திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கூட்டுத் தூய்மைப் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,  ஆணையர் பிரியங்கா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் ஜான் செல்வம், ஜெரால்டு மற்றும் மைக்சன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார், ரெக்ஸ்லின், ரிக்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory