» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜூலை 26ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 35 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு
வியாழன் 23, ஜூலை 2026 10:50:10 AM (IST)
புதியம்புத்தூரில் வருகிற 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்ககம் (StartupTN), தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அஸ்கார்டியா ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் "வெற்றி படி 2026" தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) புதியம்புத்தூரில் நடைபெறுகிறது.
புதியம்புத்தூர் ஜான் டி. பாப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும் இவ் வேலைவாய்ப்பு முகாமைக் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா தொடங்கி வைக்கிறார்.இம் முகாமில் 35-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 2,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வுகளை நடத்த உள்ளன.
10, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பாலிடெக்னிக், பொறியியல், கலை, அறிவியல், வணிகவியல், மேலாண்மை, செவிலியர், தொழிற்கல்வி முடித்த வேலை தேடுவோர் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.
முகாமில் பங்கேற்க விரும்புவோர் சுயவிவரக் குறிப்பு (Resume), அடையாள அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள், அனுபவச் சான்றிதழ் (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் வர வேண்டும். அனுமதி முற்றிலும் இலவசம்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த வேலை நாடுவோர் இவ் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மண்டல அலுவலர் C. ஜிஜின் துரை தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 63830 53025, 98949 76875, 80720 07360 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








