» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூட்டிய வீட்டில் முதியவர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை
வியாழன் 23, ஜூலை 2026 10:26:09 AM (IST)
கோவில்பட்டி அருகே பூட்டிய வீட்டிற்குள் தனியாக வசித்து வந்த 70 வயது முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரவாஞ்சி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 70). இவருக்குக் கற்பகலட்சுமி என்ற மகளும், மாரிச்செல்வம், மகேஷ்குமார் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.
மூத்த மகன் மாரிச்செல்வம் சென்னையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இளைய மகன் மகேஷ்குமார் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பிள்ளைகள் அனைவரும் வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசித்து வரும் நிலையில், மலைச்சாமி மட்டும் கோவில்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மலைச்சாமியின் வீடு பூட்டியே இருந்துள்ளது. இன்று அப்பகுதியைச் சேர்ந்த அண்டை வீட்டார் மலைச்சாமியின் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது மலைச்சாமி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








