» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பக்கிள் ஓடை பணியால் குடிநீர் குழாயில் உடைப்பு: குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த மேயர் அறிவுறுத்தல்!

புதன் 22, ஜூலை 2026 12:52:05 PM (IST)

MayorBuckleodai.jpg

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணியின் போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார் .

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பக்கிள் ஓடை அகலப்படுத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இப் பணிகளின் போது, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட புதிய பேருந்து நிலையம், கலைஞர் பூங்கா, வி.எம்.எஸ். நகர், ஆர்.எஸ்.பி.ஆர். நகர், ஆதிபராசக்தி நகர், கங்கா பரமேஸ்வரி காலனி, சுப்பையா பூங்கா, லூர்தம்மாள்புரம், டி.எம்.சி. காலனி ஆகிய பகுதிகளுக்கும்; கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வி.வி.டி. பூங்கா, குருஸ்புரம் ஆகிய பகுதிகளுக்குமான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குச் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது 

இக்குடிநீர் குழாய் உடைப்பைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்குக் இன்னும் இரு நாட்கள் ஆகும் என்பதால் பொதுமக்கள் சிரமத்தைப் பொறுத்துக் கொண்டு, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory