» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் நியமனம்: உள்துறைச் செயலாளர் உத்தரவு!

புதன் 22, ஜூலை 2026 12:25:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய எஸ்பியாக சிவபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சிவபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை டி.ஜி.பி. அலுவலகக் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக மீரா ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப் பணியிட மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை உள்துறைச் செயலகம் வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்பி சிவபிரசாத் கர்நாடக மாநிலம், பெங்களூரூவை சேர்ந்தவர். 2016ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று விருதுநகரில் உதவி எஸ்.பி., யாக பணியை துவக்கினார். மதுரை, சென்னை வண்ணாரப்பேட்டை, அண்ணாநகரில் துணை கமிஷனராக பணிபுரிந்தார். மதுரை, தேனி எஸ்.பி.,யாக இருந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory