» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தேசியக் கொடி நாள் : மாணவிகள் அணிவகுப்பு!

புதன் 22, ஜூலை 2026 11:53:08 AM (IST)

NationalFlagStmarys.jpg

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தேசியக் கொடி நாளை முன்னிட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரியின் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. அமைப்புகள் இணைந்து "நமது மூவர்ணக் கொடி – இந்தியாவின் பெருமை" என்ற தலைப்பில் 120 என்.சி.சி. மாணவிகள் தேசியக் கொடி வடிவில் நேர்த்தியாக நின்று மூவர்ணக் கொடியைக் காட்சிப்படுத்தினர். 

கல்லூரி முதல்வர் அருட்சகோதரி சி.ஷிபனா தலைமையில் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னாள் முதல்வர் அருட்சகோதரி ஜெஸ்ஸி பெர்னாண்டோ சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள், தேசபக்திப் பாடல், கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரி நிர்வாகத்தினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory