» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: விசாரணை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைப்பு!
புதன் 22, ஜூலை 2026 11:24:32 AM (IST)
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் நேற்று முன்தினம் காலையில் கைது செய்யப்பட்ட ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ-விடம், மாவட்டக் காவல் அலுவலகத்தில் வைத்துச் சுமார் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர், தூத்துக்குடி 1-வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்னிலையில் காவல்துறையினர் அவரை ஆஜர்படுத்தினர். நீதிமன்ற வாதங்களின் போது, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ-வைக் காவல் எடுத்து விசாரிக்கக் காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார்.
தொடர்ந்து, அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தரப்பு வழக்கறிஞர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று (புதன்கிழமை) காலை தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதி, விசாரணையைப் பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே மார்க்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை ஏற்று மார்க்கண்டேயனுக்கு போலீஸ் காவல் வழங்கப்படுமா? அல்லது காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு நிராகரிக்கப்படுமா? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








