» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய சாதனை: 4 ஆண்டுகளில் 146 ஹெக்டேர் சதுப்புநிலக் காடுகள் மீட்பு!

புதன் 22, ஜூலை 2026 10:48:25 AM (IST)

MangroForest.jpg

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 146 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்புநிலக் காடுகள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் எம்.இளையராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வனத்துறையின் பாதுகாப்பு முயற்சிகளால் முக்கானி, பழையகாயல், புன்னகாயல் ஆகிய கடலோர கிராமங்களில் 146 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்புநிலக் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்புத் திட்டம் (TNGPCCR), நீலப் பொருளாதாரம் (TN-SHORE) இயக்கம், நபார்டு (NABARD) வங்கி நிதி உதவியுடன் இச் சீரமைப்பு நடைபெற்றுள்ளது.

தாமிரபரணி ஆற்று முகத்துவாரப் பகுதியான புன்னகாயலில் ஓத நீர் அனைத்துக் பகுதிகளுக்கும் செல்லும் வகையில் 'மீன்முள்' (Fish-bone) வடிவக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குச் அதிக உப்புத்தன்மை தாங்கும் 'அவிசென்னியா மரினா', 'ரைசோபோரா முக்ரோனாட்டா' வகை அலையாற்றுத் தாவரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் எம்.இளையராஜா கூறுகையில், "மாவட்டத்தில் 200 ஹெக்டேர் சதுப்புநிலக் காடுகளை மீட்டெடுக்கும் இலக்கில் 50 ஹெக்டேர் மட்டுமே பாக்கியுள்ளது. ரோச்சே பூங்காப் பகுதியில் காடுகள் வளர்ப்பை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

பாதுகாப்புப் பணிகளில் மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்க முக்கானி, பழையகாயலில் சதுப்புநில மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகளுக்காக மீனவர்களுக்குச் சிறுநிதிகளும் வழங்கப்படவுள்ளன.


மக்கள் கருத்து

சங்கர்Jul 23, 2026 - 07:54:52 PM | Posted IP 172.7*****

முருகன் சார் இந்த செய்திக்கு தகுந்த ஆதாரம் உள்ளதா? வனதுறை திருடர்கள் பல லட்சங்களை ஏப்பம் விட்டுள்ளனர். எங்கு புதிதாக இந்த செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன என்ற தகவலையும் படங்களையும் வனத்துறை அதிகாரிகளிடம் கேளுங்கள் மாயமாகி விடுவார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory