» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீடுபுகுந்து ரூ.26ஆயிரம் பணம் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 22, ஜூலை 2026 10:37:52 AM (IST)
செய்துங்கநல்லூரில் வீடுபுகுந்து பீரோ லாக்கரை உடைத்து ரூ.26 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டி மனைவி சொர்ணா (80). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். நேற்று மதியம் சொர்ணா அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வி்ட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் திரும்பி வந்தார்.
அப்போது அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கரை உடைத்து அதிலிருந்த ரூ.26ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜஸ்டஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








