» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சமூக ஆர்வலர்கள் மொட்டையடித்து நூதன போராட்டம்!
புதன் 22, ஜூலை 2026 8:05:20 AM (IST)

கோவில்பட்டியில் நடைபாதை, சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாத நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் மொட்டையடித்துச் சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி அலுவலகங்களில் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகளால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போதிலும், பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து உயிரிழப்புகளும் தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றாமல் அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளைக் கண்டித்துக் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம், பயணியர் விடுதி முன்பும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் மொட்டையடித்துச் சங்கு ஊதி போராட்டம் நடத்தினர்.நகராட்சி அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர் கந்தவேலும், பயணியர் விடுதி முன்பு முருகனும் மொட்டையடித்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தொடர்ந்து கோரிக்கை மனுவைக் கோவில்பட்டி நகராட்சி பொறுப்புப் பொறியாளர் சணல்குமாரிடமும், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்திலும் வழங்கினர். நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் மனு அளிக்கும் போது, உதவி கோட்டப் பொறியாளர் ரத்தினபாபுவிற்கும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுச் சலசலப்பு நிலவியது. பின்னர் அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








