» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணியிடம் 3½ பவுன் நகை பறிப்பு: இளைஞர் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:04:52 AM (IST)
கோவில்பட்டியில் பெண்ணியிடம் 3½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேவியர் மனைவி அனிதா (45). இவர் கடந்த 6-ஆம் தேதி ராஜீவ் நகர் அருகே நின்றுகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இவரது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இச் சம்பவம் குறித்து அனிதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில், இக் குற்றச் சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பாலாஜி நகரைச் சேர்ந்த காளிராஜ் (31) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








