» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கு சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் : நிபந்தனை ஜாமீனில் வந்த ரவுடி மீண்டும் கைது!
புதன் 22, ஜூலை 2026 8:01:40 AM (IST)
ஆறுமுகனேரியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, கொலை வழக்குச் சாட்சிகளை அரிவாளைக் காட்டி மிரட்டிய ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (27) என்பவர் மீது கொலை உட்பட 12 வழக்குகள் ஆறுமுகனேரி, ஆத்தூர் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.கடந்த ஆண்டு ஆறுமுகனேரி - காயல்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள சுடலைமாடசுவாமி கோவில் பூசாரி முருகேசனைக் கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆறுமுகனேரி செல்வராஜபுரம் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் இசக்கிமுத்து அரிவாளைக் காட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். பூசாரி கொலை வழக்கில் தனக்கு எதிராகச் சாட்சி சொல்பவர்களைக் கொலை செய்து விடுவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த ஆறுமுகனேரி காவல் துறையினர், இசக்கிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)

வீட்டின் கதவை உடைத்துத் திருட முயற்சி: இருவர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:47:22 AM (IST)

அருணாச்சலம் மரணத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் - குடும்பத்தினரிடம் கனிமொழி எம்.பி., ஆறுதல்!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:26:40 AM (IST)

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டினரின் சதி: தூத்துக்குடியில் நடிகர் சரத்குமார் பேட்டி!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:22:27 AM (IST)








