» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!

வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)



ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 16) அதிகாலை 5.15 மணிக்குத் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் மீனவ மக்களுக்காகப் பங்குத்தந்தை தலைமையில் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. மதியம் 12 மணிக்கும் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டது. 

மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித சந்தியாகப்பரின் சொரூபம் குருசு ஆலயத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மாலை 6 மணிக்குக் கோவிலை வந்தடைந்தது. இரவு 7.15 மணிக்குக் கொடிகள் மந்திரிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. 

தொடர்ந்து மறையுரையும், நற்கருணை ஆராதனையும் நடைபெற்றன. இக்கொடியேற்ற நிகழ்வில் பெரியதாழை, உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, கூடுதாலை, தூத்துக்குடி மற்றும் அமலிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடலோர மீனவ மக்கள் பங்கேற்றனர்.

விழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்குத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்குத் திருயாத்திரை திருப்பலியும் நற்கருணை ஆராதனையும் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி ஜூலை 25, 2026 அன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4.30 மணி, காலை 5.10 மணி, காலை 5.50 மணி, காலை 7 மணிக்குச் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறும். 

தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆலயத் திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதிஉலா புறப்பாடு நடைபெற்று முக்கிய வீதிகள் வழியாகப் பவனியாகச் செல்ல உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளைக் குருசு ஆலய பங்குத்தந்தை, அருட் சகோதரிகள், பங்குபேரவையினர் மற்றும் ஊர்நலக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory