» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தின் கடன் சுமையைக் குறைக்க உரிய நடவடிக்கை: வி.கே. சசிகலா பிரசாரம்!

திங்கள் 13, ஏப்ரல் 2026 8:03:12 AM (IST)



நான் பொறுப்பேற்றால் தமிழகத்தின் கடன் சுமையைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா கூறினார். 

கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் சு. கண்ணனை ஆதரித்துப் பிரசாரம் செய்த சசிகலா பேசியதாவது: திமுக ஆட்சியில் மின் கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக கட்டணம் வசூலிக்கும் ஒரு அரசு மக்களுக்குத் தேவையா என்பதை வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்திற்குக் கடன் சுமை ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் தற்போது மாநிலத்தின் கடன் அதிகரித்துள்ளது. நான் பொறுப்பேற்றால் கடன் சுமையைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான மூலப்பொருள்களை சிட்கோ மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள பேருந்து நிலையம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும், 40 ஆண்டுகாலமாகப் பட்டா கோரும் வீரவாஞ்சி நகர், வள்ளுவர் நகர் மக்களின் கோரிக்கைகளும் கிடப்பில் உள்ளன.கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உட்படத் தமிழகம் முழுவதுமே மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்றார்.

ஸ்ரீவைகுண்டத்தில் தொண்டர்கள் ஏமாற்றம் 

ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஃபார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்யச் சசிகலா சனிக்கிழமை இரவு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இரவு 8:30 மணி முதலே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். ஆனால், நான்குனேரி பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் வர இரவு 10:15 மணி ஆகிவிட்டதால், தேர்தல் விதிமுறைகளின்படி பேச முடியாமல் தொண்டர்களை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றார். அவரை ஃபார்வர்டு பிளாக் தொகுதி உறுப்பினர் முத்துராமலிங்கம் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர் ராஜ உடையார் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory