» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் 4,000 கோவில்களுக்குத் திருப்பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தேர்தல் பரப்புரை!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 10:30:31 AM (IST)



தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட  திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் "திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் 4,000 கோவில்களுக்குத் திருப்பணிகள் நடைபெற்றது" என்று தெரிவித்தார். 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன், மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். கீழ ரங்கநாதபுரத்தில் தொடங்கி வடக்கு ரதவீதி, ஜோசப் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று அவர் ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே விரிவாக்கத்தால் அகற்றப்படவிருந்த விநாயகர் கோவிலுக்கு மாற்று இடம் வழங்கி, புதிய கோவில் கட்டித் தரப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் வெள்ளப் பேரிடர் காலங்களில் மக்களுடன் நின்று பணியாற்றியுள்ளேன். தூத்துக்குடியின் மழைநீர் வடிகால் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. வின்பாஸ்ட் தொழிற்சாலை, டைடல் பார்க் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. தேர்தல் வாக்குறுதிப்படி இல்லத்தரசிகளுக்கு ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும்.

முன்னதாக, விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வ.உ.சி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்தப் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சகாயராஜ், தேமுதிக தயாளலிங்கம், மக்கள் நீதி மய்யம் ஜவஹர், விடுதலை சிறுத்தைகள் கட்சி விமல் வங்காளியர், மனிதநேய மக்கள் கட்சி யூசுப், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தனலட்சுமி, முத்து மற்றும் மதிமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory