» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திரு இருதயப் பேராலயத்தில் புனித வியாழன் சிறப்புத் திருப்பலி: ஆயர் பங்கேற்பு!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:10:13 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வாரத்தை முன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் எளிமையைப் பறைசாற்றும் 'பாதம் கழுவும் நிகழ்ச்சி' நேற்று நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, தனது 12 சீடர்களுடன் அமர்ந்து இறுதி உணவு அருந்தினார். அப்போது, ஒருவருக்கொருவர் அன்பு செய்து தாழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் சீடர்களின் பாதங்களை இயேசு கழுவினார் என்று விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் புனித வியாழக்கிழமையன்று இந்தச் சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் 'சின்னக்கோவில்' என்று அழைக்கப்படும் திரு இருதயப் பேராலயத்தில், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் போது, இயேசுவின் போதனையைப் பின்பற்றி 12 முதியவர்களின் பாதங்களை ஆயர் கழுவி முத்தமிட்டார். பின்னர் அவர்களுக்குப் புனித ரொட்டிகளையும், சிறப்புப் பரிசுப் பொருட்களையும் அவர் வழங்கினார். 

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர். இயேசு கிறிஸ்து உயிர்நீத்த தினமான புனித வெள்ளி இன்று (ஏப்ரல் 3) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்துத் தேவாலயங்களிலும் சிறப்புச் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து, வருகிற ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory