» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரு குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை: ஆயுள் தண்டனை கைதிக்கு சாகும் வரை சிறை...!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:18:30 AM (IST)
தூத்துக்குடியில் 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையிலுள்ள குற்றவாளிக்கு, தற்போது சாகும் வரை சிறை தண்டனை விதித்துப் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகிய இரு குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக, தூத்துக்குடியைச் சேர்ந்த சின்னத்தம்பி (எ) லம்பா (34) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை செய்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி திருமதி. பிரீத்தா அவர்கள் நேற்று (01.04.2026), சின்னத்தம்பி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்குப் சாகும் வரை வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கும் அரசு நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் (மொத்தம் 10 லட்சம்) இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
குற்றவாளி சின்னத்தம்பி (எ) லம்பா, ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். அந்த வழக்கில் கடந்த 2025-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது. தற்போது அவர் சிறையில் உள்ள நிலையில், இந்த போக்சோ வழக்கில் 'சாகும் வரை சிறை' என்ற கூடுதல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் சாட்சிகளைச் சரியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தித் தண்டனை பெற்றுத் தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், வழக்கைத் திறம்படப் புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர்கள் சாந்தகுமாரி, ராமலெட்சுமி, அரசுத் தரப்பில் சிறப்பாக வாதிட்ட வழக்கறிஞர் ஜுடு ஏஞ்சலோ மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்கள் சமுத்திரகனி, ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







