» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் இந்திய அரசியலமைப்புச் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்!
புதன் 1, ஏப்ரல் 2026 3:49:42 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குக் கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, வணிக நிர்வாகவியல் துறைப் பேராசிரியர் ரித்திகா பாரதி வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரியின் முன்னாள் மாணவரும், கோவில்பட்டி கம்பன் கழகச் செயலாளருமான சரவணச்செல்வன், வழக்கறிஞர் ஜெய் ஸ்ரீ கிறிஸ்டோபர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இராமலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் அடிப்படைச் சட்டங்கள் செயல்படும் விதம், நீதிமன்றத் தீர்ப்புகள் எவ்வாறு பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக அமைகின்றன, இந்தியச் சட்ட அமைப்பு மற்றும் நீதிமன்றத்தின் நான்கு அடிப்படைத் தூண்கள் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து மாணவர்கள் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு வழக்கறிஞர் விளக்கமளித்து, அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தார்.
இந்நிகழ்ச்சியில் வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை மாணவ-மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைப் பேராசிரியர்கள் ராம ஜெயா, வெற்றிச்செல்வி மற்றும் வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக, வணிக நிர்வாகவியல் துறைப் பேராசிரியர் சுருதி நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







