» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை: ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!

செவ்வாய் 31, மார்ச் 2026 12:40:28 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான  க. இளம்பகவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் அமைதியாகவும் வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான  க. இளம்பகவத்இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், புகார்களைப் பெறுதல் மற்றும் வீடியோ கண்காணிப்புப் பணிகளின் தற்போதைய நிலையை ஆட்சியர் கேட்டறிந்தார். கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினித் திரைகள், வரைபடங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகப் பெறப்படும் புகார்கள் பதிவு செய்யப்படும் முறையை அவர் ஆய்வு செய்தார்.

பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்புடன் பின்பற்றவும் அங்கிருந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory