» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு!

செவ்வாய் 31, மார்ச் 2026 8:58:45 AM (IST)

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டுடன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக, திருநெல்வேலியைச் சேர்ந்த பிரேம்சங்கர் (29) மற்றும் ஓட்டுடன்பட்டியைச் சேர்ந்த பிரபு (38) ஆகிய இருவரைப் புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  பாக்கியராஜ்  நேற்று பிரேம்சங்கர் மற்றும் பிரபு ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என உறுதி செய்தார். அவர்களுக்குத் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கில் சாட்சிகளைச் சரியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தித் தண்டனை பெற்றுத் தந்த மணியாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  அஜுகுமார், வழக்கைத் திறம்படப் புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர்  ஞானராஜ், அரசுத் தரப்பில் சிறப்பாக வாதிட்ட வழக்கறிஞர்  முருகேசன் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்  பால்பாண்டி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory