» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி

செவ்வாய் 31, மார்ச் 2026 8:49:00 AM (IST)

கயத்தாறு அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வெள்ளாளன்கோட்டை கிராமம், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் கிருஷ்ண பெருமாள் (28). இவர் சம்பவத்தன்று நெல்லைக்குச் சென்றுவிட்டு, தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் வெள்ளாளன்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நான்கு வழிச்சாலையில் உள்ள கட்டபொம்மன் சிலை அருகே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே முத்துக்குட்டி (58) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாகக் கிருஷ்ண பெருமாளின் வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்தக் கோர விபத்தில் கிருஷ்ண பெருமாள் மற்றும் முத்துக்குட்டி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கிருஷ்ண பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த முத்துக்குட்டிக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கயத்தாறு காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory