» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிளஸ்-2 மாணவி கொலை வழக்கில் 20 நாட்களில் போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:44:39 AM (IST)
விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பவம் நடந்த 20 நாட்களிலேயே போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி, பிளஸ்-2 மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்தத் துயரச் சம்பவத்தில் குற்றவாளியைப் பிடிக்கப் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் விசாரணையில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பல்வேறு மாதிரிகள் டி.என்.ஏ. (DNA) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியிடமிருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரியும், தர்மமுனீஸ்வரனின் மாதிரியும் ஒத்துப்போனது உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், இதற்கான முழுமையான குற்றப்பத்திரிகையை நேற்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒரு கொடூரமான குற்றச் சம்பவம் நடந்த 20 நாட்களுக்குள் குற்றவாளியைக் கைது செய்து, அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருப்பது காவல்துறையின் துரித நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள தர்மமுனீஸ்வரன் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். அன்றைய தினம் அவருக்குக் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







