» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக, அதிமுகவில் சீட் கிடைக்காதவர்களுக்கே த.வெ.க-வில் வாய்ப்பு: அமைச்சர் கீதா ஜீவன் கிண்டல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:26:02 AM (IST)
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து விலகியவர்களையும், வாய்ப்பு கிடைக்காதவர்களையும் தேடிப்பிடித்து தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி திட்டங்குளத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: "கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை திமுக நேரடியாகக் களம் காண்கிறது. திமுக வேட்பாளராகப் போட்டியிடும் கருணாநிதி (கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர்) நிச்சயமாகப் பெரும் வெற்றி பெறுவார்."
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. தமிழக தேர்தல் வரலாற்றில் எப்போதும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் 'கதாநாயகன்' மற்றும் 'கதாநாயகி'யாக இருக்கும். தற்போதைய தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'சூப்பர் ஸ்டார்' என்று வர்ணித்துள்ளார். மக்கள் திமுகவின் வாக்குறுதிகளை மட்டுமே நம்புவார்கள்."
"எங்களது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ரூ. 8,000 மதிப்பிலான பரிசுக்கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவைப் பார்த்து நகல் எடுக்கப்பட்டது அல்ல. மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன் பிறகுதான் எடப்பாடி பழனிசாமி இது குறித்துப் பேசினார். எங்களது தேர்தல் குழு ஒரு மாதமாகத் திட்டமிட்டு, மக்களுக்கான பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தக் கூடிய வகையில் இந்த அறிக்கையை வடிவமைத்துள்ளது."
"தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களைத் தேடிப் பிடித்த கதை அனைவருக்கும் தெரியும். உதாரணமாக, ஆர்.எஸ். முருகன் என்பவர் திமுகவில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார்; இங்கு வாய்ப்பு கிடைக்காததால் இன்று த.வெ.க வேட்பாளராகியுள்ளார். அதேபோல், அதிமுகவைச் சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணன் நாங்குநேரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தற்பொழுது த.வெ.க வேட்பாளராகிவிட்டார்.
திமுக மற்றும் அதிமுகவில் இருந்து விலகியவர்களைத் தேடிப் பிடித்து சீட் வழங்குவதுதான் அக்கட்சியின் தற்போதைய நிலைமையாக உள்ளது. தேர்தல் முடிந்த பிறகுதான் நடிகர் விஜய் தனது கட்சியின் உண்மை நிலையை அறிந்துகொள்வார்." இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







