» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 21 வேட்புமனுக்கள் தாக்கல் : ஆட்சியர் தகவல்!

செவ்வாய் 31, மார்ச் 2026 8:07:24 AM (IST)



திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 21 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று (30.03.2026) வேட்புமனுத் தாக்கல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. மனுத்தாக்கல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான க. இளம்பகவத்,  வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் நாளான நேற்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மொத்தம் 21 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் தொகுதியில் அதிகபட்சமாக 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன (5 ஆண்கள், 1 பெண்). இதில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கோவில்பட்டி தொகுதியில் 4 மனுக்களும், விளாத்திகுளம், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று தொகுதிகளில் தலா 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் மட்டும் குறைந்தபட்சமாக 2 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இன்று (31.03.2026) மற்றும் நாளை (01.04.2026) ஆகிய இரண்டு தினங்கள் அரசு விடுமுறை என்பதால், வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது. மீண்டும் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெற அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory