» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 7:57:31 AM (IST)
சொத்துப் பிரச்சினை தகராறில் தம்பியைக்கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி (56) என்பவருக்கும், அவரது தம்பி முருகன் (44) என்பவருக்கும் இடையே சொத்துப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முனியசாமி, தனது தம்பி முருகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இது குறித்துப் பசுவந்தனை போலீசார் வழக்குப் பதிவு செய்து முனியசாமியைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் - 2-இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி பிரீத்தா, முனியசாமி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் துரிதமாகப் புலனாய்வு செய்து, உரியச் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தித் தண்டனை பெற்றுத் தந்த மணியாச்சி டிஎஸ்பி அஜுகுமார், அப்போதைய பசுவந்தனை ஆய்வாளர் சித்திரகலா, அரசுத் தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், நீதிமன்றக் காவலர் கவிதா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







