» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டி: 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

செவ்வாய் 31, மார்ச் 2026 7:50:23 AM (IST)



தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டியிடுவதாக அந்தப் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் சமக வேட்பாளர்களின் விபரம் வருமாறு:

தூத்துக்குடி: ஏ. அந்தோணி பிச்சை

ஸ்ரீவைகுண்டம்: எஸ். ஜெபராஜ் டேவிட்

திருச்செந்தூர்: பி. அருண் சுரேஷ்குமார்

ஓட்டப்பிடாரம் (தனி): எஸ். ராஜாத்தி

கோவில்பட்டி: எம். சகாயராஜ்

விளாத்திகுளம்: பி. கண்டிவேல்

இது குறித்து மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கழகம் தனித்துக் களம் காண்கிறது. அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் வருகிற சனிக்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய உள்ளனர்" எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory