» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டி.சி.டபிள்யூ. சார்பில் மண்ணும் மொபைலும் விவசாயி 2.0 கருத்தரங்கம்
திங்கள் 30, மார்ச் 2026 8:20:44 PM (IST)

டி.சி.டபிள்யூ. நிறுவனம் ஸ்கந்தவேல் என்னும் மென்பொருள் நிறுவனத்துடன் இணைந்து விவசாயத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தும் "மண்ணும் மொபைலும் விவசாயி 2.0” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி சாகுபுரத்தில் டி.சி.டபிள்யூ. நிறுவனம் ஸ்கந்தவேல் என்னும் மென்பொருள் நிறுவனத்துடன் இணைந்து விவசாயத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடந்த கருத்தரங்கிற்கு டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். ஸ்கந்தவேல் மென்பொருள் நிறுவன இயக்குநர் பிர்லாபோஸ் முன்னிலை வகித்தார்.
இளைஞர்கள் கிராமங்களில் இருந்தே தொழில்நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வழிகாட்டும் வகையில் ‘வேளாண் கடல்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சரியான விலை கிடைக்க உதவும் வகையில் இந்த செயலி செயல்படும் என அதன் இயக்குநர் பிர்லாபோஸ் விளக்கினார்.
சுற்றுவட்டார பகுதியில் உள்ள முன்னோடி விவசாயிகளான ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் டாக்டர் பாலசுப்ரமணிய ஆதித்தன், பாஸ்கர் வேலாயுதம், ஐகோ, முருகானந்தம், ராஜேஸ் ஆகியோர் கருத்துகளை பகிர்ந்தனர். மேலும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் தாமோதரன், தமிழ்நாடு இயற்கை உழவன் சங்கத் தலைவர் ரமேஷ் ஆகியோர் பேசினர். செயலியின் பயன்பாடு குறித்து குகன் விளக்கம் அளித்தார். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். திருபாகரன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் டி.சி.டபிள்யூ. நிறுவன உதவித் தலைவர் சுரேஷ், ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்கம், தெற்கு ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் சங்கம், மூலக்கரை கிராம ஓப்படி விவசாய அபிவிருத்தி சங்கம், ஆறுமுகநேரி விவசாய அபிவிருத்தி சங்கம், தாமிரபரணி தென்கால் நத்தக்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கம், தாமிரபரணி தென்கால் நாலாயிரமுடையார் குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கம், நல்லூர் கீழ்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கம், துளுக்கன்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் ஆகிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை டி.சி.டபிள்யூ. நிறுவன மக்கள் தொடர்பு துணை பொது மேலாளர்கள் பிரகாஷ், ஒயிட்பீல்டு ஆர்தர் மற்றும் வினோத், டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







