» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

திங்கள் 30, மார்ச் 2026 8:11:32 PM (IST)



தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 99 ஆயிரத்து 400 ரூபாயை பறக்கும் படையினர் கைப்பற்றினர். மாவட்ட முழுவதும் சுமார் 57 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கே வந்த ஒரு காரை சோதனை செய்தனர் அப்போது அந்த காரில் இருந்த கணக்கில் வராத ரூபாய் 99 ஆயிரத்து 400 இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அந்தப் பணத்தை கைப்பற்றிய பறக்கும் படை அதிகாரிகள் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பாலமுருகனிடம் பணத்தை ஒப்படைத்தனர். மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் இதுவரை சுமார் 57 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory