» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட 3 பேர்கள் வேட்பு மனுதாக்கல்
திங்கள் 30, மார்ச் 2026 4:50:14 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி உள்பட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று 30ம் தேதி துவங்கியது. இதில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலருமான பிரபுவிடம் மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திருச்செந்தூர் வெள்ளாளன் விலையை சேர்ந்த ராஜசேகர் மகன் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சி நிறுவனர் தொழிலதிபர் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்த சீனிவாசன் மகன் டி.பி.எஸ்.பொன்குமரன் தேர்தல் அதிகாரி பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அக் கட்சியின் செயலாளர் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்
தூத்துக்குடி நாம் இந்தியர் கட்சி சார்பில் தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த முருகன் விநாயகம் மகன் ஸ்ரீகாந்த் என்பவர் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இன்று ஒரு நாள் மட்டும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மூன்று பேர் வேட்பு மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று 31 ஆம் தேதியும் நாளை ஏப்ரல் 1ஆம் தேதியும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இரண்டு நாட்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது ஏப்ரல் 2ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







