» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூட்டிய வீட்டுக்குள் விவசாயி சடலம்: தற்கொலைக்குத் தூண்டியதாக கடிதம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:07:20 AM (IST)
ஆழ்வார்திருநகரியில் விவசாயி ஒருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் தனது வீட்டிற்குள்ளேயே சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் கோதண்டராமன் (43). திருமணமாகாத இவர், விவசாயம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்தார். இவருக்கும், சிவராமமங்கலத்தைச் சேர்ந்த முத்துராசு என்பவருக்கும் இடையே நில எல்லை மற்றும் ஆடு மேய்க்கும் விவகாரத்தில் கடந்த சில நாட்களாகத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
முத்துராசு, கோதண்டராமனின் கம்பி வேலியைச் சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. நேற்று முன்தினம் கோதண்டராமனின் வீடு நீண்ட நேரமாகப் பூட்டிக் கிடந்ததோடு, அங்கிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலறிந்து வந்த ஆழ்வார்திருநகரி போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கோதண்டராமன் உடல் அழுகிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சடலத்தின் அருகே ஒரு கடிதம் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அதில், எனது சாவுக்கு முத்துராசு தான் காரணம்" என்று எழுதப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







