» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அகில இந்தியத் துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் அணி சாதனை!

ஞாயிறு 29, மார்ச் 2026 8:26:57 PM (IST)



அகில இந்தியத் துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில் வ.உ.சி துறைமுகம் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

புதிய மங்களூர் துறைமுகத்தில் அகில இந்தியப் பெருந்துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. கடற்கரை கைப்பந்து போட்டிளில் தூத்துக்குடிவ.உ.சி துறைமுக அணி, கொச்சி துறைமுக அணியை 21-17, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.  

சாதாரண கைப்பந்து போட்டிளில் சென்னை துறைமுக அணியை 25-18, 25-14 என்ற கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்தியா முழுவதிலும் இருந்து கொச்சி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 10 முக்கியத் துறைமுக அணிகள் பங்கேற்ற இந்த மிகக் கடுமையான போட்டியில், வ.உ.சி துறைமுக அணி இரண்டு பதக்கங்களை வென்று தூத்துக்குடிக்குத் பெருமை சேர்த்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory