» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுவன் கொலை வழக்கு: 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
சனி 28, மார்ச் 2026 9:08:04 PM (IST)
கோவில்பட்டியில் 17 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் இன்று தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 17 வயது சிறுவன் ஒருவன் மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கி படுகொலை செய்யப்பட்டான். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான முனியசாமி (19), குமார் (24), சிவப்பிரசாத் (எ) ஸ்கூட்டி சிவா (19) மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த நெல்லை நாயகம் (21) ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன், பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். அதன்பேரில், இன்று (மார்ச் 28) 4பேர்களும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







