» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 509 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : 3 பேர் கைது!
சனி 28, மார்ச் 2026 8:31:05 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் காவல்துறை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 509 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன், உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 4 நாட்களில் ஆறுமுகநேரி மற்றும் திருச்செந்தூர் பகுதிகளில் பெரும் அளவிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 25.03.2026 அன்று ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திரு. திலீபன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த திருச்செந்தூரைச் சேர்ந்த பாலகணேஷ் (36) மற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பீர்முகமது (37) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து சுமார் 355 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
காரில் கடத்திய 154 கிலோ பறிமுதல்
அதேபோல், திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் மதுரைவீரன் தலைமையிலான போலீசார் நேற்று (27.03.2026) காந்திபுரம் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரைச் சோதனையிட்டதில், திருச்செந்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (27) என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக 154 கிலோ புகையிலை பொருட்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரைப் போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்கள் மற்றும் காரைப் பறிமுதல் செய்தனர்.
கடந்த 4 நாட்களில் மட்டும் மொத்தம் 509 கிலோ புகையிலை பொருட்கள், ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த ஆறுமுகநேரி மற்றும் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாகப் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







