» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பங்குனி உத்திர திருவிழா: அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் மகா அன்னதானம்
சனி 28, மார்ச் 2026 4:55:24 PM (IST)

மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் 6ம் நாளான இன்று மகா அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 23ம் தேதி நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து விழாவின் 6ம் நாளான இன்று காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பகல் 1 மணிக்கு மகா அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10ம் நாளான ஏப்.1ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகமும் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு சுவாமி அம்பாள்களுக்கு மகா சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.
இரவு 1 மணிக்கு உற்சவ அய்யனார் கற்பக பொற்சப்பரத்தில் எழுந்தருளி மேலப்புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் குமரகுருபரன், வினோபால், செல்வராஜ், அசோகராஜ், சரவணன், ராமகிருஷ்ணமுத்து, சுந்தரபாண்டியன், சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







