» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக வேட்பாளராக அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு : தூத்துக்குடியில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
சனி 28, மார்ச் 2026 4:43:07 PM (IST)

தூத்துக்குடி திமுக வேட்பாளராக அமைச்சர் கீதா ஜீவன் அறிவிக்கப்பட்டதை வரவேற்று திமுக மாணவர் அணி சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான திருமதி கீதா ஜீவன் மீண்டும் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் கீதா ஜீவன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் உற்சாகக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதன்படி, தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முன்பு, காய்கனி மார்க்கெட், அண்ணா சிலை மற்றும் பழைய மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் திரண்ட திமுகவினர், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்விற்கு மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகி மரிய தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், வட்டச் செயலாளர்கள் சி.டி. கங்கா, ராஜேஷ், சுரேஷ், மகாராஜன் மற்றும் என்.டி.பி.எல். கிளைச் செயலாளர் முத்துராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர் அணி பகுதிச் செயலாளர் கார்த்தி, சன் கிளைச் செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாகப் பங்கேற்று அமைச்சர் கீதா ஜீவனின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







