» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜன் போட்டி: அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சனி 28, மார்ச் 2026 3:32:07 PM (IST)



தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இக்கூட்டணியில்: பாஜக 27 தொகுதிகள், பாமக 18 தொகுதிகள், அமமுக 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

ஒட்டப்பிடாரம் (தனி) சுந்தர்ராஜன்

மடத்துக்குளம் முன்னாள் அமைச்சர் சண்முகவேலு

சைதாப்பேட்டை செந்தமிழன்

மன்னார்குடி எஸ். காமராஜ்

பூவிருந்தமல்லி (தனி) ஏழுமலை

பெரியகுளம் (தனி) கதிர்காமு

திருச்சி மேற்கு தொட்டியம் ராஜசேகரன்

காரைக்குடி தேர்போகி பாண்டி

திருப்பத்தூர் ஞானசேகரன்

நான்குநேரி இசக்கிமுத்து

திருவையாறு வேலுகார்த்திகேயன்

டி.டி.வி. தினகரனிடம் வாழ்த்து

ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர்ராஜன், கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory